Published : 12,Jun 2017 11:30 AM

'பெண்ணின் காதிற்குள் நுழைந்த சிலந்தி'

Bengaluru-Woman-Had-A-Headache--Then--A-Spider-Crawled-Out-Of-Her-Ear

பெங்களுரூவில் ஒரு பெண்ணின் காதிற்குள் நுழைந்த சிலந்தியை மருத்துவர்கள் உயிருடன் அகற்றினர்.

பெங்களுரூவில் வசித்து வருபவர் லட்சுமி. இவர் மதிய வேளையில் தனது வீட்டில் உள்ள வராண்டாவில் படுத்து தூங்கியுள்ளார். சிறிது நேரத்தில் எழுந்த அவருக்கு தொடர்ந்து தலைவலி ஏற்பட்டுள்ளது. அவரது வலது காலில் ஏதோ ஒரு தொந்தரவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தலைவலி அதிகரிக்கவே, அருகில் உள்ள மருத்துவமனையில் லட்சுமி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது காதில் உயிருடன் சிலந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், சிறிது நேரம் போராடி காதிற்குள் இருந்த சிலந்தியை வெளியே எடுத்தனர். மேலும், இதனால், லட்சுமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். சிலந்தி காதிலிருந்து உயிருடன் வெளியே வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்