ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச பால் பாக்கெட் - களத்தில் விஜய் ரசிகர்கள்

ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச பால் பாக்கெட் - களத்தில் விஜய் ரசிகர்கள்
ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச பால் பாக்கெட் - களத்தில் விஜய் ரசிகர்கள்
வட சென்னை விஜய் ரசிகர்கள் ஆயிரம் குடும்பங்களுக்கு இலவசமாகப் பால் பாக்கெட்டுகளை வழங்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக  பரவி வருவதால்  நாடு தழுவிய அளவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதன் காரணமாக  திரை நட்சத்திரங்களும் ரசிகர்களும் வீட்டிலேயே  சிக்கித் தவித்து வருகின்றனர். மற்றும் ஒட்டு மொத்தமாக நாடே முடங்கிப் போய் உள்ளதால் ஏழை, எளிய மக்கள் சரியான உணவுப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். 
அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தனி நபர்கள் சிலர் சேர்ந்து உதவி செய்து வருகின்றனர்.   உணவுப் பொட்டலங்கள், சானிடைசர்கள் மற்றும் முகமூடிகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். வேறு சிலர் அரசின் நிவாரணப் பணிகளுக்காக  நன்கொடை அளித்தும் வருகின்றனர். 
இந்நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் தங்களால் இயன்ற உதவிகளை அளித்து வருகின்றனர்.  இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருளான பால் பாக்கெட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆகவே விஜய் ரசிகர்கள் பொது மக்களுக்கு இலவசமாகப் பால் பாக்கெட்களை வங்கியுள்ளனர். ஏறக்குறைய 1000 குடும்பங்களுக்குப்  பால் பாக்கெட்டுகளை வழங்கி உதவியுள்ளனர். வட சென்னை மாவட்டம் சார்பில் இந்த உதவியை விஜய் ரசிகர்கள் இதைச் செய்துள்ளனர். 
இது தொடர்பாக, வட சென்னையை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் சிவா, அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “கொரானா அச்சத்தால் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அன்றாட தேவைகளுக்கு வடசென்னை மாவட்டம் இளைஞரணி  சார்பாக 1000 குடும்பங்களுக்கும் பால் பாக்கெட் வழங்கப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார். இப்பதிவுடன் சில புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பாக தேனி மாவட்டத்தில் விஜய்யின் ரசிகர்கள்  250 குடும்பங்களுக்கு காய்கறிகளை வழங்கி உதவினர். அதேபோல், இப்போது வடசென்னை விஜய்யின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்குப் பால் பாக்கெட்டுகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com