Published : 12,Jun 2017 10:05 AM
கலப்பட பாலைத் தடுக்க நடவடிக்கை என்ன?: அறிக்கை கோரியது நீதிமன்றம்

கலப்பட பாலைத் தடை செய்யக் கோரும் வழக்கில் ஜூலை 24ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கலப்பட பால் இருப்பதாகக் கூறும் அமைச்சர் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், கலப்பட பாலைத் தடை செய்யும் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜூலை 24ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மக்கள் நலனை உறுதி செய்யுமாறு தலைமை நீதிபதி அமர்வு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.