[X] Close

"இணையும்..... ஆனா இணையாது" - அதிமுக அணிகளில் குழப்பம்

jayakumar-about-admk-tie

அணிகள் இணைப்புக்காக அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டு விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த நிலையில், அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என எடப்பாடி அணியினர் தெரிவித்துள்ளனர்.  

அதிமுக அம்மா அணியில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் காலை செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார். அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என பொதுமக்களும், கட்சியினரும் விரும்புவதாக தெரிவித்தார். அதனால் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும், அந்த முடிவில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், இணைப்புக்காக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பாக அமைக்கப்பட்டிருந்த குழு கலைக்கப்படுவதாக அறிவித்திருந்தார். இதனால் இரு அணிகள் இணையுமா இணையாத என்ற குழப்பத்தில் அதிமுக கட்சியினர் உள்ளனர். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close