Published : 31,Mar 2020 10:30 AM
தொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு

வெளிமாநில தொழிலாளர்கள் உட்படத் தொழிலாளர்கள் அனைவரிடமும் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என்று வீட்டு உரிமையாளர்களுக்கு எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாட்டில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. அத்துடன் ஊரடங்கு உத்தரவால் தொழிலாளர்கள் மற்றும் கூலிப் பணியாட்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் பொருளாதார பாரத்தைக் குறைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதேபோல், இடம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகளையும் அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், வெளிமாநில தொழிலாளர்கள் உட்படத் தொழிலாளர்கள் அனைவரிடமும் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என்று வீட்டு உரிமையாளர்களுக்கு எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை கேட்டுக் கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதேபோல், வீட்டை காலி செய்யுமாறும் வற்புறுத்தக் கூடாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல், வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் பிடித்தம் இல்லாமல் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
‘3 மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்கப்படாது’ - தமிழக நிதித்துறை செயலர்
#LIVE தமிழகத்தில் அனைத்து தொழிலாளர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது https://t.co/xL0Tb9HNLw
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 31, 2020