நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார்.
இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பலரும் தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சினிமா
நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் கொரோனா விழிப்புணர்வை சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர். பலரும்
உடற்பயிற்சி தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர். இதுபோக பல நடிகர்கள் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்
நடிகை ஒருவர் செவிலியராக மாறியுள்ளார்.
ஷாரூக் கானின் ஃபேன் திரைப்படத்தில் நடித்த நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார். இவர் டெல்லி
மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் 2014-ம் ஆண்டு நர்சிங் டிகிரி பெற்றவர் ஆவார். தற்போது தன்னார்வத்துடன் தன் பணியைத்
தொடங்கியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், கல்லூரியில் படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, சமூகத்திற்கு சேவை செய்வதாக
உறுதிமொழி ஏற்றுக்கொண்டேன். இதுதான் அதற்கான சரியான தருணம் என நினைக்கிறேன். மருத்துவமனையில் எத்தனை மணிநேரம்
அல்லது இரவுகளை செலவிட வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த முயற்சியை மேற்கொள்வதில் நான் மிகவும்
மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிராக போராட செவிலியராக களம் இறங்கியுள்ள நடிகை ஷிகா மல்கோத்ராவுக்கு பலரும் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு தனி மனிதர்களின் உழைப்பும், சேவை மனப்பான்மையும் கொரோனாவை இந்தியாவை விட்டு நிச்சயம் விரட்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் - உறுதி செய்த கவுதம் மேனன்!!
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!