“அமெரிக்காவில் 2 வாரங்களில் கொரோனா உயிரிழப்பு உச்சம் தொட வாய்ப்பு”- ட்ரம்ப் அச்சம்

“அமெரிக்காவில் 2 வாரங்களில் கொரோனா உயிரிழப்பு உச்சம் தொட வாய்ப்பு”- ட்ரம்ப் அச்சம்

“அமெரிக்காவில் 2 வாரங்களில் கொரோனா உயிரிழப்பு உச்சம் தொட வாய்ப்பு”- ட்ரம்ப் அச்சம்

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் உச்சத்தை தொடும் வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார்.


வெள்ளை மாளிகையில் பேசிய அவர் " பொதுமக்களுக்கான சமூக விலகல் கட்டுப்பாடு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஜூன் மாதத்திலிருந்துதான் நிலைமை சீராக தொடங்கும். கொரோனா சிகிச்சைக்கு மிக முக்கியமான வென்டிலேட்டர் சாதனங்களை பல மருத்துவமனைகள் பதுக்கி வைத்துள்ளதால் அவற்றை விடுவிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.


அமெரிக்காவில் கொரோனா தாக்குதலால் இறந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 453 பேர் இறந்துள்ளதாகவும், வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தாக்குதலால் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை இறக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் தேசிய தொற்று நோய் சிகிச்சை மைய இயக்குனர் ஆன்டனி ஃபாஸி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com