Published : 27,Mar 2020 10:15 AM
கொரோனாவை தடுக்க மக்கள் நிதி தரலாம்: தமிழக அரசு வேண்டுகோள்

கொரோனா தடுப்பு பணிக்காகப் பொதுமக்கள் நிதியுதவி அளிக்கலாம் எனத் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற உதவிகளை மக்கள் செய்யலாம். நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டப்பிரிவு 80(G) இன் கீழ் 100 சதவீதம் வரிவிலக்கு உண்டு. எனினும் ரூ10 லட்சத்திற்கு மேல் நிதி தருவோரின் விவரங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்படும். முதல்வரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடையை நேரடியாக வழங்குவதை ஊக்குவிக்க இயலாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#COVID19 TN Stats 27.3.20 :
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 27, 2020
Screened Passengers- 209284
Beds in Isolation Wards- 12955
Ventilators : 3018
Current Admissions- 274
Samples Tested - 1143 (Negative-1067, Positive -35 (1 discharged), Under Process- 41)
#TN_Together_AgainstCorona#Vijayabaskar@MoHFW_INDIA
தமிழகத்தில் இதுவரை 35 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 12,955 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெண்டிலேட்டரில் 3,018 பேர் வைக்கப்பட்டுள்ளனர். 1143 பேருக்கு இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.