[X] Close

#Topnews மத்திய அரசின் சலுகை அறிவிப்புகள் முதல் பிரதமர் மோடியின் வலியுறுத்தல் வரை

இந்தியா,உலகம்,கொரோனா வைரஸ்

Modi-s-insistence--from-the-first-government-concessions-to-some-more

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சமாளிக்க புதிய நடைமுறைகளை வகுக்க வேண்டும். ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்.


Advertisement

ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை இலவசமாக விநியோகிக்க ஏற்பாடு.

ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சலுகைத் திட்டத்தை அறிவித்தார் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு. 


Advertisement

image

 

கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற இளைஞர்...!


Advertisement

சலுகைத் திட்டங்கள் சரியான திசையில் செல்வதற்கான முதல் அடி என ராகுல்காந்தி வரவேற்பு. நிதி போதாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சனம்.

மளிகைக் கடைகள் வழக்கம்போல் இயங்க அரசு அனுமதி. கோழி, மீன், முட்டை உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல தடை இல்லை என்றும் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு. சிகிச்சை பெற்று வருவோரில் 2 பேர் குணமடைந்துவிட்டதாக சுகாதாரத்துறை தகவல்.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் சீனாவை முந்தியது அமெரிக்கா. சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் டொனால்டு ட்ரம்ப் அவசர ஆலோசனை.

image

ராஜஸ்தானில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்தது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சமானது - குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்வு.


Advertisement

Advertisement
[X] Close