பழைய சாதம் என நினைக்கும் போதே சிலர் இப்போது கிடைக்காதா என ஏங்குவது உண்டு. பழைய சாதத்தை ஐஸ் பிரியாணி என்றெல்லாம் அழைப்பது உண்டு. இந்த காலத்திலும் பழைய சோறுக்கு இருக்கிறது மவுசு.
இளைய தலைமுறை சாண்ட்விச், பீட்சா, பர்கர் என ஃபாஸ்ட் புட் பக்கம் சாய்ந்தாலும் பாரம்பரிய உணவான கூழ், கம்பு, திணை போன்றவற்றில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த இடத்தில் பழைய சோறும் உள்ளது. அந்த காலத்து முதியவர்கள் கூட திடகாத்திரமாக இருப்பதற்கு முக்கியமான ஒன்று பழைய சோறு.
பழைய சோறு பற்றிய ஆய்வு ஒன்றை அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association) நடத்தியுள்ளது. அதில் பழைய சோற்றின் பெருமைகளும் பலன்களும் பட்டியலிடப் பட்டிருக்கின்றன. முதல் நாள் மதியம் வடித்து, மீந்துபோன சாதத்தில் நீர் ஊற்றி அடுத்த நாள் அதை சாப்பிடுவதே பழைய சோறு. வெறும் தண்ணீர் சாதத்தில் என்ன சத்து இருக்கப் போகிறது என இன்றைய இளசுகள் நினைப்பதுண்டு.
பழைய சோறு புதிய நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. ஒவ்வாமைப் பிரச்னை, தோல் தொடர்பான வியாதிகளுக்கு நல்ல மருந்து பழைய சோறு. நீராகாரம் எனப்படும் பழைய சோற்றில் உள்ள தண்ணீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். அதைவிட முக்கிய பலன், பழைய சோறு இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும். தோல் சுருக்கங்கள் வருவதை குறைக்கும். வயிற்றுப் புண், மலச்சிக்கல், உடல் சோர்வு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு, பழைய சோறு.
நேற்று வைத்த சாதம் கெட்டு போய் பாக்டீரியா போன்ற தொற்றுக்கள் வராதா என சிலர் நினைப்பது உண்டு. ஆமாம் பழைய சோற்றிலும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியா உள்ளது. இது கால்சியம், புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், விட்டமின் B12 போன்ற சத்துகளை தரும் திறன் கொண்டது. இதைவிட எளிதாக கிடைக்கும் ஆரோக்கிய அமிர்தம் வேறு இருக்கிறதா? பழைய சோற்றுக்குத் தொட்டுக் கொள்ள பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் செம பொருத்தம்.
சர்க்கரை நோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அளவோடு இதைச் சாப்பிடுவது நல்லது. இனி பச்சை மிளகாயையும் பழைய சோற்றையும் பார்சல் பண்ணலாமே!
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்