Published : 25,Mar 2020 08:48 AM

21 நாட்கள் உங்களால் வீட்டில் இருக்க முடியாதா..?: ஆதங்கத்தை கொட்டும் தூய்மை பணியாளர்கள்

People-who-are-not-afraid-of-corona---the-request-of-the-cleaning-staff

கொரோனா குறித்து அச்சமில்லாமல் இருக்கும் மக்களுக்கு சென்னையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் கொரோனாவை ஒழித்துக்கட்ட தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்தியாவை பொருத்தவரை தற்போது வரை 595 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 

image

கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நேற்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பூதியமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

இது மட்டுமல்லாமல் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் நேற்று கைத்தட்டி கெளரவித்தனர். கொரோனா இழப்புகளை கருத்தில் கொண்டு அரசு பல முயற்சிகளை எடுத்து வந்தாலும், மக்களிடம் இன்னும் கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லை. ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றனர்.

இதனையடுத்து கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமால் சுற்றித் திரியும் மக்களை பற்றி சென்னையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் சிலரிடம் கேட்கப்பட்டது. அவர்கள் கூறியதாவது “ அவரவர்கள் உயிர் மீது அவர்கள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நம்மால் கொரோனா விழிப்புணர்வு குறித்து சொல்லத்தான் முடியும். எங்களை பொருத்தவரை நாங்கள் கட்டாயம் வேலைக்கு வந்துதான் ஆக வேண்டும். வேலைக்கு வந்தால்தான் இன்று எங்களால் உணவு உண்ண முடியும்.

விழுப்புரம்: ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களுக்கு தோப்புக்கரண தண்டனை

image

 இணையவாசிகளுக்கு நல்ல செய்தி!! நெட்ஃபிளிக்ஸ், ஃபேஸ்புக் அறிவித்த புதிய அறிவிப்பு!!


ஒருவேளை எங்களுக்கும் கொரோனா விதிமுறைகள் விதிக்கப்பட்டால் நாங்களும் வீட்டில்தான் இருப்போம். ஆனால் இங்கு உள்ள சிலர் விடுமுறை நாட்களில் நேரத்தை செலவிடுவதுபோல் நடந்து கொள்கின்றனர். அரசு பொதுமக்களை காக்க போராடி வருகிறது. ஆகவே இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு ஒத்துழைப்பு கொடுக்கிறார்களோ அந்த அளவிற்கு நல்லது.

ஒரு குழந்தை பிறப்பதற்கே பத்து மாதங்கள் ஆகின்றன. இவர்களால் ஒரு 20 நாட்கள் வீட்டில் இருக்க முடியாதா? ஆகவே பொது மக்கள் நிச்சயம் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து, அவர்களது உயிரை காத்து க்கொள்ள வேண்டும். உங்களுக்காக நாங்கள் வீதியில் இறங்கி உதவி வருகிறோம். எங்களுக்காக நீங்கள் வீட்டில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

 

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்