[X] Close

‘நீங்கள் வெளியே சென்றால், கொரோனா வீட்டிற்குள் வந்துவிடும்’: பிரதமர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ்

If-you-go-out-corona-will-come-inside-your-home-says-Modi

நீங்கள் வெள்யே சென்றால் கொரோனா வீட்டுக்குள் வந்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்


Advertisement

நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர் மோடி " ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. சமூக விலகல் தவிர்க்க முடியாதது. குழந்தைகள், பெரியவர்கள், வியாபாரிகள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு குறித்து மீண்டும் ஒருமுறை பேச வந்திருக்கிறேன். மக்கள் ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மக்களுக்கு நன்றி. கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்கக் கூடாது. கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை; நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக விலகலே வைரஸ் பரவுவதை தடுக்க சிறந்த வழி என்பது தெளிவாகியுள்ளது" என்றார்.

image


Advertisement

மேலும் தொடர்ந்த அவர் " கொரோனாவை விளையாட்டாக நினைக்காதீர்கள்; ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது. இன்றிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் ஊரங்கு என்பது உங்களை குடும்பத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும். அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும்.
மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை " என்றார்.

கொரோனாவின் தீவிரம் குறித்து பேசிய மோடி " மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இல்லையெனில் நாம் அழிவை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். ஒருத்தருக்கு தெரியாமலேயே கொரோனா அவரை தொற்றக்கூடும், கவனமாக இருங்கள். காட்டுத்தீ போல கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100 சதவீதம் கட்டுப்படுத்துவது சாத்தியம். ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதுதான். ஊரடங்கு காலமான 21 நாட்களை ஆக்கப்பூர்வமாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

image


Advertisement

மேலும் தொடர்ந்த அவர் " வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிரமங்களையும் உணருங்கள். அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொறுமை காத்து ஆதரியுங்கள். ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு கிராமும் முழுமையாக அடைக்கப்படுகிறது. காவல்துறையினர் உள்ளிட்ட சேவை பணியாளர்களுக்கும் நன்றி தெரிவியுங்கள். மருத்துவத்துறையினர் இரவு பகல் பாராமல் சேவையாற்றி வருகின்றனர். 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். பொருட்கள் வாங்க ஒரே இடத்தில் எல்லோரும் குவியக் கூடாது. நீங்கள் வெளியே சென்றால், கொரோனா வீட்டிற்கு வரும். முழு ஊரடங்கை கடைபிடிக்காவிட்டால் நாட்டின் பல குடும்பங்கள் பெரிய அளவுக்கு பாதிக்கப்படும். சுகாதாரமாக இருப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். ஊடகத்தினருக்காகவும் மக்கள் பிரார்த்தியுங்கள். கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புக்களை மேம்படுத்த ரூ15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மருத்துவர்களின் ஆலோசனையின்றி மருந்துகளை வாங்கவோ, உட்கொள்ளவோ கூடாது" என்றார் அவர்.


Advertisement

Advertisement
[X] Close