ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட 144 தடை உத்தரவு என்ன சொல்கிறது?

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட 144 தடை உத்தரவு என்ன சொல்கிறது?
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட 144 தடை உத்தரவு என்ன சொல்கிறது?

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் 144 தடை உத்தரவு என்பது குறித்து விளங்கிக் கொள்வது அவசியமாகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நேற்று பேசுகையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு நாளை மாலை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், 144 தடை உத்தரவு என்றால் என்ன? என்பது குறித்து விளக்கங்கள் அறிந்து கொள்வது நம் கடமையாகிறது. 144 தடை உத்தரவு என்பது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ, சுகாதார சீர்கேடு அதிகமிருந்தாலோ 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது வழக்கம்.

தற்போது கொரோனா பரவலை தடுக்க 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் இருப்பவர்கள் 144 தடை உத்தரவை பிறப்பிக்கலாம். 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் போது 5 பேரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ பொது இடத்தில் கூடக்கூடாது. 144 தடையை மீறினால் நோய்த்தொற்று தடுப்புச்சட்டம், அவசர கால பேரிடர் சட்டம், சட்டப்பிரிவு 188-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். 144 தடை உத்தரவை மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com