Published : 11,Jun 2017 04:52 AM

கடவுள் கொடுத்த செல்வம்: 96 குழந்தைகளுடன் வாழும் 3 அப்பா!

3-fathers-have-96-children-in-Pakistan

 

பாகிஸ்தானில் மூன்று பேர் 96 குழந்தைகளுக்கு அப்பாவாகி உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் குழந்தைகள் பிறப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. அங்கு ஒரு பெண்ணுக்கு குறைந்தது மூன்று குழந்தைகள் உள்ளன என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. 1998-ம் ஆண்டு பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 13.5 கோடி. 18 ஆண்டுக்கு பின், அங்கு மக்கள் தொகை மீண்டும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்ட தகவல்படி அங்கு மக்கள் தொகை 20 கோடியை நெருங்கியுள்ளது.

அங்கு ஒவ்வொருவரும் அதிக குழந்தைகளை பெற்று வருகின்றனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பன்னுவை சேர்ந்த குல்ஜார் கான் என்பவருக்கு 36 குழந்தைகள்!
 
‘குடும்ப கட்டுப்பாடு செய்வதை, எங்கள் மதம் தடுக்கிறது. இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. கடவுளால் கொடுக்கப்பட்ட குழந்தை பிறப்பை நான் கட்டுப்படுத்த வேண்டும்?’ எனக் கேட்கிறார் கான். இவருக்கு வயது 57. இவரது மூன்றாவது மனைவி இப்போது கர்ப்பமாக இருக்கிறார். 

இவரது அண்ணன் மஸ்தான் கான் வாஸிருக்கும் மூன்று மனைவிகள். இவர்களுக்கு 22 குழந்தைகள் உள்ளனர். 
’கடவுள் உணவையும் வசிப்பதற்கு தேவையான வசதிகளையும் வழங்குவார். ஆனால், மக்கள் அவர் மீதான நம்பிக்கையில் பலவீனமாக இருக்கிறார்கள்’ என்கிறார் மஸ்தான். மேலும் அவர் கூறும்போது, ‘எங்கள் வீட்டில் குழந்தைகள் விளையாட, வெளியில் செல்ல தேவையில்லை' என்றார்.

ஜன் முகமத் என்ற மற்றொருவருக்கு 38 குழந்தைகள். நூறு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இவர் லட்சியமாம். அதை நோக்கி செல்ல இவருக்கு பெண் கிடைக்கவில்லை என்பது இவரது பெரும் கவலை. 

‘முஸ்லிம்கள் அதிகரித்தால் அவர்களின் எதிரிகள் பலவீனமடைவார்கள். அதனால் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்கிறார் முகமது.
குடும்ப கட்டுப்பாடு பற்றி இவர்களின் மனைவிகளிடம் பேசச் சென்றால், மூன்று கணவர்களும் அதற்கு அனுமதிக்கவில்லையாம்.

பாகிஸ்தானில், மக்கள் தொகை அதிகரித்து வருவதற்கு உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்