ஃபேஸ்புக்கில் இஸ்லாம் மதம் குறித்து அவதூறு கருத்தினைப் பதிவிட்டதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
ஒகாரா பகுதியைச் சேர்ந்த டைமூர் ராசா என்பவர் இஸ்லாம் மதம் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாக கடந்தாண்டு கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு விசாரணை பஞ்சாப் மாகாணத்தின் பஹவால்பூர் மாவட்ட தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ராசாவின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதாகக் கூறி, அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ஷபீர் அகமது உத்தரவிட்டார். சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது பாகிஸ்தானில் இதுவே முதல்முறையாகும். பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 97 சதவீதம் பேர் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் நிலையில், மதம் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க்கப்படுகிறது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்