[X] Close

கொரோனாவை ஒழிக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு : உலக சுகாதார அமைப்பு

இந்தியா,உலகம்,கொரோனா வைரஸ்

India-has-tremendous-capacity-in-eradicating-coronavirus-pandemic--WHO

இந்தியாவுக்கு தொற்று நோய் வைரஸான கொரோனாவை ஒழிக்கும் திறன் உண்டு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


Advertisement

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரை 3,34,000 பேருக்கும் மேற்பட்டோர் உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அச்சமளிக்கும் விஷயம் என்னவென்றால், உலக அளவில் 67 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு பரவிய கொரோனா வைரஸ் அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேருக்கு பரவியது. பின்னர் அடுத்த 4 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேருக்கு பரவி 3 லட்சத்தை கடந்தது. இதுவரை சுமார் 15 ஆயிரம் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துள்ளனர்.

image


Advertisement

இந்தியாவை பொருத்தவரை 492 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போதைய நிலவரப்படி 446 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 22 பேர் புதிதாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாதாகவும் கூறப்பட்டுள்ளது.

image

இந்நிலையில் இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் செயல் இயக்குநர் மைக்கெல் ரியான், கொரோனா வைரஸை ஒழிக்கும் மிகப் பெரிய திறன் இந்தியாவுக்கு உண்டு என தெரிவித்துள்ளார். ஏற்கெனவே உலகை அச்சுறுத்திய சின்னம்மை மற்றும் போலியோ ஆகிய தொற்றுநோய்களை ஒழித்த இந்தியா, தற்போது கொரோனாவையும் கட்டுப்படுத்தி ஒழிக்கும் திறமையை கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.


Advertisement

கொரோனா அச்சம் : கோவை சிறையில் 136 கைதிகளுக்கு ஜாமீன்

கொரோனா ஒழிப்பிற்கு எளிதில் விடை கிடைக்காது என்றும், ஆனால் இதுபோன்ற தொற்றுநோய் ஒழிப்பில் ஏற்கெனவே இந்தியா உலகிற்கு தனது திறமையை நிரூபித்து காட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close