[X] Close

காட்டு யானை தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Elephant-attack--Child-dead

தேனி மாவட்டம் தேவாரம் அருகே காட்டு யானைகள் தாக்கியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்தான்.


Advertisement

விவசாயி முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரும் சுள்ளானத்து ஓடை பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 காட்டு யானைகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் படுகாயமடைந்த சிறுவன் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

கோவை மாவட்டம் போத்தனூர் அருகே காட்டு யானை தாக்கி கடந்த வாரம் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது தேனியில்  சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான். வனப்பகுதிகள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படுவதும், கடும் வறட்சியுமே காட்டு யானைகள், விளை நிலங்களுக்குள்ளும், ஊருக்குள்ளும் நுழைய முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close