கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுடன் இருக்கும் நபர்கள் முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3,36,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,15,317 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 97,636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா முழுவதும் மாநில அரசுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில் நேற்று ஒருநாள் சுய ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. எவ்வளவுதான் பாதுகாப்புகளுடன் இருந்தாலும் இந்தத் தொற்று நோய் மிகவேகமாகப் பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மருத்துவ உலகம் போராடி வருகிறது. முறையான மருந்து இதற்குக் கண்டுபிடிக்கப்படாததால்தான் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனாவுக்கு உரிய மருந்தை இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும் நோயாளிகளுடன் தொடர்பில் உள்ள, நோய் பாதிப்புக்கு அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தை மத்திய அரசு இப்போது பரிந்துரை செய்துள்ளது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை நோய் தாக்க அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு இந்த மருந்தைத் தர இயலாது. ஆனால் உடன் இருப்பவர்கள் வேண்டுமானால் முன்னெச்சரிக்கையாக தங்களைத் தாக்காமல் இருக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்புக்குழு பரிந்துரை செய்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இந்த மருந்து ஏற்கெனவே மலேரியாவுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
ஏற்கெனவே மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது. இதற்குமுன்பாக இம்மருந்தினை கொரோனா தடுப்புக்கான மருந்தாக அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஜோர்டான் நாடும் இதனைப் பயன்படுத்துவதற்குப் பரிந்துரை செய்திருந்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த குழு, இதனைத் தேசிய அவசரக்கால மருந்தாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட மருத்துவரின் அறிவுரையில்லாமல் இந்த மருந்தைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து இந்தியன் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் கூறியபோது, “நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார ஊழியருக்கு மட்டுமே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிந்துரைக்கப்படுகிறது. இரண்டாவதாக, கொரோனா பாதித்த நோயாளியை ஒரு வீட்டில் தங்க வைத்துப் பராமரித்து வரும் நபர்களுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மருந்து நோய்த்தடுப்புக்கு மட்டுமே என்பதை விளக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டும். தடுப்புக்கு மட்டுமே அவர்கள் அதை எடுக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.
#WATCH: ICMR Director-General: Hydroxychloroquine is recommended only for a healthcare worker who is treating a #COVID patient. Secondly, it's recommended only for persons staying&caring for a household positive patient. They can take that only for prophylaxis,only for prevention pic.twitter.com/jylhDHFe3b— ANI (@ANI) March 23, 2020
Loading More post
‘பிரதமர் ரணில் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்கக் கூடாது’ - கஜேந்திரகுமார் எம்பி
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
’சூர்யா 41’ கைவிடப்படுகிறதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூர்யாவின் அப்டேட்!
சட்டவிரோத விசா வழக்கு - மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை
மீண்டும் மூடுவிழா காண்கிறது சாண்ட்ரோ
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!