கொரோனா வைரஸ் எதிரொலியால் வீட்டிலிருந்து பணிபுரிவோருக்கு பிரத்யேக ஆஃபர் ஒன்றை ஜியோ அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஐ கடந்துவிட்டது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் மக்கள் கூடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 19 மாநிலங்களை முடக்க மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்து இணையதளம் மூலம் பணிபுரியும் பணியாளர்களை கவரும் வகையில் ஒரு ஆஃபரை ஜியோ வெளியிட்டுள்ளது. ‘வொர்ட் ஃப்ரம் ஹோம்’ (வீட்டிலிருந்து பணி புரிதல்) என அந்த ஆஃபருக்கு பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
இதன்படி, ரூ.251க்கு ரிசார்ஜ் செய்தால் 51 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி வரை மொத்தம் 102 ஜிபி டேட்டா சேவைவழங்கப்படும். அதேசமயம் இந்த பேக்கேஜ் மூலம் போன் அழைப்புகள் மேற்கொள்ளவோ ? அல்லது மெசெஜ்கள் அனுப்பவோ ? முடியாது. இந்த ஆஃபர் முற்றிலும் டேட்டா தேவைக்கானது மட்டுமே.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி