தமிழகத்தின் உள் மாவட்டத்துக்குச் செல்லும் பேருந்துகள் குறைந்தளவு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பல்வேறு மாவட்டங்களையும் முடக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அந்தவகையில், தமிழகத்தை பொருத்தவரை சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 3 மாவட்டங்களில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்பட்டவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அவர்களுக்கு பேருந்து வசதி இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டத்துக்குச் செல்லும் பேருந்துகள் குறைந்தளவு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அவர்கள்,
வெளி மாநிலத்துக்கு செல்லும் தனியார் பேருந்துகள் 31-ம் தேதி வரை நிறுத்தப்படுகிறது. தமிழகத்தின் உள் மாவட்டத்துக்கு செல்லும் பேருந்துகள் குறைந்தளவு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். தமிழக உள் மாவட்ட பகுதியில் 30 முதல் 40 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்
ஊரடங்கு முழுவதுமாக அமலுக்கு வந்தால் என்னவெல்லாம் கிடைக்கும்? என்னவெல்லாம் கிடைக்காது?
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!