[X] Close

இன்று தேவைக்கேற்ப பேருந்து; தளர்த்தப்பட்டது மக்கள் ஊரடங்கு!!

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Tamilnadu-janata-curfew-corona-live-updates

தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.


Advertisement

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சு‌ய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சுய ஊரடங்கை, தமிழக மக்கள் முறையாகக் கடைபிடித்தனர். இதனால் சென்னை, மதுரை, திருச்சி, கோ‌வை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி‌ காணப்பட்டன.

தன்னலமின்றி அ‌யராது பாடுபடும் பணியாளர்களுக்கு நேற்று மாலை 5 மணி அளவில், கரவொலி எழுப்பியும், மணியடித்தும் மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்நி‌லையில், இரவு 9 மணிக்கு நிறைவடைய இருந்த‌ சுய ஊரடங்கை, இன்று காலை 5 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.


Advertisement

22 மணி நேரம் நீடித்த ஊரடங்கு, இன்று காலை 5 மணி அளவில் நிறைவடைந்தது. இதையடுத்து, தேநீர் கடைகள், காய்கறி கடைகள் திறந்திருக்கின்றன. பயணிகளின் தேவையை பொறுத்து, பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.

Related Tags : tamilnaducoronacorona indiaindia coronacorona update

Advertisement

Advertisement
[X] Close