சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து போட்டியை விட்டு அந்த அணி வெளியேறியது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸில் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா. டேவிட் வார்னரும் ஆரோன் பிஞ்சும் களமிறங்கினார். வார்னர் 21 ரன்னில் வெளியேற, பிஞ்சுடன் இணைந்தார் கேப்டன் ஸ்மித். இருவரும் அடித்து ஆடினர். ஸ்கோர் 136 ரன்னாக இருந்த போது, பிஞ்ச் கேட்ச் ஆனார். அவர் 68 ரன்கள் எடுத்தார். அடுத்து இறங்கிய ஹென்ரிக்ஸ் 17 ரன்னிலும், ஸ்மித் 56 ரன்களிலும் வெளியேற, அடுத்து வந்தவர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. டிராவிஸ் ஹெட் மட்டும் நிலைத்து நின்று 71 ரன் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட், ரஷித் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி, 35 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் கேப்டன் மோர்கனும், ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸும் ஆஸி. பவுலர்களை கலங்கடித்தனர். ஸ்கோர் 194 ரன்களாக உயர்ந்த போது மோர்கன் (87 ரன்) ரன் அவுட் ஆனார். நின்று ஆடிய ஸ்டோக்ஸ், மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார்.
இங்கிலாந்து 40.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த்–லீவிஸ் விதிமுறை பயன்படுத்தப்பட்டது. அதன்படி, 40.2 ஓவர்களில் இங்கிலாந்துக்கு 201 ரன்கள் போதுமானதாக இருந்தது. இதையடுத்து இங்கிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதுபெற்றார். இந்த தோல்வியை அடுத்து ஆஸ்திரேலிய அணி போட்டியில் இருந்து வெளியேறியது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்