[X] Close

கொரோனா நோயாளிகளை கண்காணிக்க தனி செயலி - தமிழக அரசு

தமிழ்நாடு

Coroner-to-monitor-coronary-disease

 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தபட்டவர்களை கண்காணிக்க தமிழக அரசு பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 298 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


Advertisement

மண்டபத்திற்குள் வருவதற்கு முன்னால் கைகழுவக் கிருமி நாசினி

image

இதனால் நாளை ரயில் சேவைகள், பேருந்துகள், உணவகங்கள் உள்ளிட்ட சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மேலும் கொரோனா குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்க 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

image

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்க பிரத்யேக செயலியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் நபர்களின் கேள்விகளுக்கு விளக்கமும் அளிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close