சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கவேண்டும் எனக்கூறி நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகநாடுகளை கடும் அச்சுருத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிற்கு 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மத்திய மாநில அரசுகள் கொரோனாவை தடுப்பதற்கு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதனால் நாளை நாடு முழுவதும் பேருந்துகள், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து பிரதமரின் கோரிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று கூறி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இன்று சமூகவலைதளங்களில் வீடியோவை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷூம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “கொரோனா உலகை உலுக்கியிருக்கிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இப்படி ஒரு வைரஸ் பாதிப்பு வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் நம்மால் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுக்க முடியும். அந்த வகையில் நாளை சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் வண்ணம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனைவரும் வெளியே வராமால் இருப்போம். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவர்களின் உயிரை பணயம் வைத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். உண்மையில் அவர்கள் மட்டும் உயிரை பணயம் வைக்கவில்லை. அவர்களின் குடும்பமே உயிரை பணயவைத்துள்ளது"
மண்டபத்திற்குள் வருவதற்கு முன்னால் கைகழுவக் கிருமி நாசினி
#jantacurfew pic.twitter.com/aha5MAtHyF — Dhanush (@dhanushkraja) March 21, 2020
மேலும் தொடர்ந்த தனுஷ் " ஆகவே அவர்களுக்காக நாம் நாளை வீட்டில் இருக்க வேண்டும். தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் முறைப்படி பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள். குறிப்பாக இளைஞர்கள் கொரோனா விஷயத்தில் அலட்சியமாக இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தயவு செய்து அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்களே கொரோனாவை பரப்பும் நபர்களாக மாறி விடுவீர்கள். நமக்காக போராடும் மருத்துவர்களுக்காகவும், செவிலியர்களுக்காகவும் நாம் நாளை மாலை 5 மணிக்கு கதவு அருகே அல்லது ஜன்னல் அருகே சென்று கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai