[X] Close

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அஸ்வினுக்கு இடம்?... என்ன சொல்கிறார் கோலி

Virat-Kohli-still-tight-lipped-on-R-Ashwin---s-return

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முக்கியமான லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி நாளை எதிர்கொள்கிறது. 

போட்டிக்கு முன்பான செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி பேசினார். தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டி குறித்து பேசிய அவர், பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அதேநேரம் அதீத நம்பிக்கையும் கூடாது. சாதாரண போட்டி போலவே, இந்த போட்டியையும் நாங்கள் எதிர்கொள்வோம் என்று கூறினார். கடந்த இரு போட்டிகளிலும் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பெறாத அஸ்வின் இந்த போட்டியில் இடம்பெறுவாரா என்று கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்குப் பதிலளித்த கோலி, இலங்கை அணிக்கெதிரான போட்டியை ஆய்வு செய்து, சில மாற்றங்களை அணியில் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். என்னென்ன  மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது குறித்து ஏற்கனவே விவாதித்து விட்டோம். சூழலுக்கு ஏற்ப மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கும் என்று அவர் தெரிவித்தார். சாம்பியன்ஸ் கோப்பை நடப்பு சாம்பியனான இந்திய அணி, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற வேண்டுமானால் நாளைய போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. 
 


Advertisement

Advertisement
[X] Close