[X] Close

கொரோனா முன்னெச்சரிக்கை - கமல் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!!

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Kamal-Haasan-Speaks-About-Corona-Virus

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.


Advertisement

கொரோனா வை‌ரஸால் பாதிக்‌கப்பட்டு இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடக் கூடாது என்பதையே அரசு பிரதானமாக கூறி வருகிறது.

இதனால் அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.


Advertisement

image

அதில், கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 4-வது, 5-வது வாரத்தில் பன்மடங்கு அதிகமாவதை பல நாடுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதனால், வைரஸ் தொற்று அறிகுறிகள் வெளியே தெரியாதபோது பாதிக்கப்பட்ட சிலர் பல இடங்களுக்குப் போயிருப்பார்கள்.

அச்சுறுத்தும் கொரோனா.. குழந்தைகள், கர்ப்பிணிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை..!


Advertisement

பாதிக்கப்பட்டது 5 பேர் என்றால், அதிலிருந்து 25 பேருக்குப் பரவும். அது இன்னும் 100 பேருக்குப் பரவாமல் தடுப்பதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. சமூகத்திடமிருந்து விலகியிருத்தல்.

image

அதீத விழிப்புணர்வு தேவைப்படுகிற 4-வது வாரத்தில் தமிழ்நாடு இப்போது இருக்கிறது. கூட்டம் கூடும் இடத்துக்குப் போவதைத் தவிர்த்துவிடுங்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாருங்கள். நான் இப்போது வெளியே வந்திருப்பது, இந்த அறிக்கையை உங்களுக்குச் சொல்வதற்காகத்தான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் வருமானம் தொடர்பாகவும், ஆரோக்கியம் தொடர்பாகவும் கமல் பேசியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close