[X] Close

கொரோனா: வாட்ஸ்அப்பில் தவறான தகவல்களை பரப்பிய 3 பேர் கைது..!

தமிழ்நாடு

Corona--Three-arrested-for-spreading-false-information-on-WhatsApp----

 


Advertisement

கொரோனா குறித்து வாட்ஸ்அப்பில் தவறான தகவல்களை பரப்பியதாக ஈரோட்டில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

image


Advertisement

கொரோனா நோய் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறன. இந்நிலையில் இந்த நோய் குறித்து பொதுமக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஒரு சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவதாக புகார் எழுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைவதால் வதந்திகளை பரப்புபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பணியாளருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?


Advertisement

image

கொரோனா எதிர்கொள்ளல்: ரூ.20,000 கோடியில் சிறப்பு திட்டத்தை அறிவித்தது கேரளா

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு சுற்று பகுதிகளில் வாட்ஸ்அப் மூலம் கொரோனா குறித்து தவறான தகவல்களை பரப்பி பொதுமக்களுக்கு ஒரு சிலர் அச்சத்தை ஏற்படுத்தி வந்ததாக கூறப்பட்டது. இந்த தகவலின்பேரில் சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தருமபுரியை சேர்ந்த வாசுதேவன் மற்றும் சித்தோட்டை சேர்ந்த கமலேஷ், வரதராஜ் ஆகியோர் வாட்ஸ்அப் மூலம் கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரப்பி வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அவர்கள் மூவரையும் சித்தோடு போலீசார் கைது செய்தனர்.


Advertisement

Advertisement
[X] Close