[X] Close

விஜய் நடிப்பில் ‘துப்பாக்கி2’? - தளபதி 65 அப்டேட்

சினிமா

vijay-a-r-murugadoss-combo-joining-again-for-thalapathy-65-latest-update

விஜயை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் ‘துப்பாக்கி 2’ படத்தினை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


விஜயை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்திற்கான இசை வெளியீட்டு விழா, கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. மேலும் இப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சம் நிலவி வருவதால் இம்மாதம் இறுதி வரை திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளன.

image

ஆகவே ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகுமா என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இப் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன் விஜய் வெளிநாடு செல்வதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் உலகம் முழுக்க கொரோனா பரவி வருவதால் அந்தப் பயணத்தை விஜய் ரத்து செய்து விட்டதாக தகவல் வெளியானது. ஆகவே வெளி நடமாட்டத்தை குறைத்துக் கொண்டு இப்போது அவர் வீட்டில்தான் இருந்து வருகிறார்.


Advertisement

மாஸ்டர் படத்தில் விஜய் பெயர் இதுதான்.. இணையத்தில் வைரலாகும் ஐ.டி கார்டு!

இந்நிலையில் விஜயின் ‘தளபதி65’ குறித்து ஒரு தகவல் கசிய ஆரம்பித்துள்ளது. ஏற்கெனவே வெற்றிமாறன், சுதா கொங்கரா, பேரரசு உள்ளிட்ட சில இயக்குநர்கள் பெயர்கள் அடிப்பட்டன. இதில் யாராவது ஒருவர் ‘தளபதி65’ படத்தை இயக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில் இப்போது இந்தப் பட்டியலை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு புதியதாக ஏ.ஆர்.முருகதாஸ் நுழைந்துள்ளார்.

image

சுதா கொங்கராவை தனது படத்தின் அடுத்த இயக்குநராக தேர்வு செய்வதற்கு முன்பாக விஜய், இவர் இயக்கியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தினைப் பார்க்க விரும்புவதாக தகவல்கள் அடிப்பட்டன. ஆனால் சுதா சொன்ன கதைக்கான முன் தயாரிப்பு பணிகளுக்கு அதிக காலம் தேவைப்படுவதால் இந்தத் திட்டத்தை தள்ளி வைத்துவிட்டு இப்போதைக்கு வேறு இயக்குநரை விஜய் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே ஏ.ஆர்.முருகதாஸை வைத்து புதிய படத்தினை இயக்கலாம் என விஜய் முடிவெடுத்து உள்ளதாகவும் தெரிகிறது. இவரது இயக்கத்தில் ஏற்கெனவே ‘துப்பாக்கி’, ‘கத்தி’,‘சர்கார்’ என மூன்று படங்களில் விஜய் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களுமே விஜயின் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றியை ஈட்டித்தந்துள்ளன.

‘மாஸ்டர்’ படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் - அஜித் ரசிகர்கள் அடித்த வாழ்த்து போஸ்டர்..!

இந்தத் திட்டத்தின்படி விஜயின் அடுத்த படத்தினை இயக்குவது இயக்குநர் முருகதாஸ்தான் என முடிவானால் இந்தப் படக்குழு ‘துப்பாக்கி 2’வை எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை சன் பிக்சர் தயாரிக்கலாம் என்றும் தகவல் கசிய ஆரம்பித்துள்ளது.

image

விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸின் கூட்டணியில் கடைசியாக 'சர்கார்' படம் வெளியானது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது. ஆகவே ‘துப்பாக்கி 2’வை பிரம்மாண்ட செலவில் அந்நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல. விரைவில் விஜய் தரப்பிலிருந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close