கண்ணுக்கே தெரியாமல், அனைவரது கண்களிலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,08,746 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,938 ஆக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கொரோனாவால் சீனா முதலில் பாதிக்கப்பட்டாலும், அதில் இருந்து மெல்ல மெல்ல அந்தநாடு மீண்டு வருகிறது. அதேசமயம் சீனாவுக்கு அடுத்தபடியாக தற்போது இத்தாலி பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக இத்தாலியின் லாம்பர்டி (lombardy) பகுதி கொரோனாவால் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.
இத்தாலியில் பிப்ரவரி 17-ஆம் தேதி 3 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 22-ஆம் தேதி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்தது. அதாவது ஐந்து நாட்களில் பாதிப்பு 26 மடங்கு உயர்ந்தது. பிப்ரவரி 27-ஆம் தேதி 655 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மார்ச் 3-ஆம் தேதி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,502ஆகவும், மார்ச் 8-ஆம் தேதி 7,375ஆகவும் உயர்ந்தது.
நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய சென்று ஏமாற்றமடைந்த புதுச்சேரி போலீசார்
அடுத்த ஐந்து நாட்களில் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000 அதிகரித்து மார்ச் 13ஆம் தேதி 17,660 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று கொரோனா தொற்று இருமடங்காகி 35,713 பேர் பாதிக்கப்பட்டதாக இத்தாலி அரசு உறுதி செய்தது. ஒரே நாளில் 4,207 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் இத்தாலியில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவியதில் இருந்து இந்த அளவுக்கு ஒரே நாளில் இத்தனை உயிர்களை பலி கொண்டதில்லை என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். இதன் மூலம் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் 69,614 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால் இத்தாலியில் 4,025 பேர் மட்டுமே கொரோனா நோய் தொற்றில் இருந்து காப்பாற்றப்பட்டு இருக்கின்றனர். தொற்று நோய் என்பதால் கொரோனா பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
இதனிடையே வைரஸ் பரவலை தடுக்க பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றை இருவாரங்களாக இத்தாலி மூடி வைத்திருக்கிறது. பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருந்தது. மேலும் பல முன்னெச்சரிக்கை அறிவிப்புகளையும் இத்தாலி அரசு பிறப்பித்து கொண்டேதான் இருந்தது. ஆனாலும், அங்கு உயிரிழப்பு நிகழ்வது தொடர் கதையாகி வருகிறது. இத்தாலியின் மக்கள் தொகையில், முதியோர்களே கணிசமான அளவில் இருப்பதால், அங்கு உயிரிழப்பு அதிக அளவில் நிகழ்வதாக உலக சுகாதார அமைப்பின் நெருக்கடி கால தலைவர் மைக் ரையான் தெரிவித்துள்ளார்.
கரூரில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி திடீர் மரணம்
இத்தாலியில் இத்தகைய உயிரிழப்புக்கு காரணம் என்ன என்று அந்நாட்டு மக்களே கூறுவது என்னவென்றால், அரசு விதித்த கட்டுப்பாடுகளை கேட்காமல் அலட்சியப்படுத்தியதுதான் என்கின்றனர். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பை சாதாரணமாக கருதிவிட்டோம் எனவும் அரசின் உத்தரவுகளை மீறி தேவையில்லாமல் வெளியே நடமாடியதே இவ்வளவு உயிரிழப்புகளுக்கு காரணம் எனவும் தெரிவிக்கின்ற்னார். இந்த தவறை மற்ற நாட்டு மக்களும் செய்யக்கூடாது எனவும் இத்தாலி மக்கள் அறிவுறுத்துகின்றனர்.
Loading More post
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்