தொழிலாளி உயிரிழப்பு: சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணி நிறுத்தம்

தொழிலாளி உயிரிழப்பு: சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணி நிறுத்தம்
தொழிலாளி உயிரிழப்பு: சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணி நிறுத்தம்

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணியின் போது ஒருவர் உயிரிழந்தார்.

இடிபாடுகளின் மீது ஜா கட்டர் வாகனத்தை நிறுத்தி இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஜா கட்டர் சரிந்தது. அதனருகில் நின்று கொண்டிருந்த ஜா கட்டர் உதவியாளர் சரத்குமார் வாகனத்தின் கீழ் சிக்கினர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வழியிலேயே உயிரிழந்தார். சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜா கட்டர் வாகன உதவியாளர் உயிரிழந்ததால், சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து அங்கு வந்த தியாகராய நகர் காவல் துணை ஆணையர் சரவணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நிகழ்வு குறித்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதனிடையே, உயிரிழந்த சரத்குமாரின் குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று சென்னை சில்க்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com