சென்னை அண்ணா சாலையில் உள்ள மருந்தகம் ஒன்று முகக்கவசங்களை பதுக்கவைத்திருந்த காரணத்தால் சீல் வைக்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கும் Favipiravir
இந்நிலையில், சென்னை ஓமந்தூரர் மருத்துவமனைக்கு எதிரே உள்ள மருந்து கடை ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த மருந்தகத்துக்குச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான முகக்கவசங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து முகக்கவசங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.
ஐரோப்பாவை நடுங்க வைக்கும் கொரோனா வைரஸ்
இதுபோன்று மருந்தகங்களில் மருத்துவ உபகரணங்கள் பதுக்கி வைப்பது அல்லது அதிக விலைக்கு விற்பது குறித்து தெரியவந்தால் 104 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!