[X] Close

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை‌ 151 ஆக உயர்வு

இந்தியா,கொரோனா வைரஸ்

coronavirus-cases-in-the-country-has-reached-151

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை‌ 151 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 25 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ‌என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு உயிரிழப்பு நேரிட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3 வெளிநாட்டினர் உள்ளிட்ட 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 2 வெளிநாட்டினர் உள்ளிட்ட 27 பேருக்கும், ஹரியானாவில் 14 வெளிநாட்டினர் உள்ளிட்ட 17 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

image


Advertisement

உத்தரப்பிரதேசத்தில் 16 பேரையும், கர்நாடகாவில் 11 பேரையும், ‌டெல்லியில் 10 பேரையும் கொரோனா தாக்கியுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தில் 8 பேரும். தெலங்கானாவில் 6 பேரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் இதுவரை 151 பேரை‌ கொரோனா தாக்கியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

image

இவர்களில் 25 பேர் இத்தாலி, பிலிப்பைன்ஸ், கனடா, இங்கிலாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இதேபோல, ‌நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமானவர்கள் மற்றும் வீட்டுக்குத் திரும்பியவர்கள் மொத்தம் 14 பேர் ஆவர்.


Advertisement

கொரோனா எதிரொலி : சிபிஎஸ்சி தேர்வுகள் மார்ச் 31 வரை தள்ளிவைப்பு..!


Advertisement

Advertisement
[X] Close