விஜயின் அடுத்தப் படத்தை இயக்கப்போவதாக வந்த செய்தியைக் கிண்டலுடன் மறுத்துள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து...
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்து காத்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் ஒரு நட்சத்திர விடுதியில் நடந்து முடிந்தது. இதில் விஜய் பேசிய சில கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனிடையே மாஸ்டர் படத்திற்கு அடுத்தபடியாக விஜய் நடிக்கும் படத்தின் பேச்சுக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது.
அதில் “துருவங்கள் பதினாறு”, “மாஃபியா” படங்களை இயக்கிய கார்த்திக் நரேன், இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா ஆகிய இயக்குநர்கள் பெயர்கள் அடிபட்டது. அதில் சுதா கொங்கரா விஜயிடம் கதையைக் கூறிவிட்டதாகவும், அது விஜய்க்குப் பிடித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்கிடையில் ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி 2 படத்தை எடுப்பதற்கான திட்டத்தை விஜயிடம் தெரிவித்ததாகவும் ஆகவே அதுதான் விஜயின் அடுத்த படமாக இருக்கும் போன்ற தகவல்களும் வெளியாகின. இது மட்டுமல்லாமல் டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள், விகரமின் “கோப்ரா” உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவும் விஜயிடம் கதை சொல்லிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
‘இப்படியெல்லாமா வதந்திகளை பரப்புவீர்கள்’ கொரோனா வதந்திகளும்.. உண்மைகளும்
இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி விக்ரமின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் சமூகவலை தளங்களில் #30DForChiyaanBDayFest என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிக் கொண்டாடினர். அதில் ஒரு ரசிகர் ஒருவர் இயக்குநர் ஞானமுத்துவின் விக்கி பீடியாவில் விஜயின் அடுத்தப்படத்தை ஞானமுத்து இயக்கப் போவதாகவும், அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் பதிவிடப்பட்டிருந்த செய்தியைப் பகிர்ந்து இது உண்மையா என இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அஜய் அந்த செய்தியைத் தனது டுவிட்டர்பக்கத்தில் பகிர்ந்து “ நோ” யாரு பாத்த வேலைனு தெரியலையே என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார். இந்த டுவிட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Nooo!! ? Idhu yaaru paatha vela nu therila ?? https://t.co/sdpG6YwcSk — Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) March 18, 2020
Loading More post
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்