[X] Close

கடவுள்- தாய்க்கு ஒப்பானது பசு: ஹைதராபாத் நீதிபதி

hyderabad-judges-comment-on-cow

பசுக்கள் இந்திய நாட்டின் புனிதமான சொத்து. கடவுளின், தாயின் இடத்தில் வைத்து மதிக்கப்படவேண்டியது. மதத்தின் பெயரால் அதை பலியிட யாருக்கும் உரிமையில்லை என கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பி.சிவசங்கராவ் கூறிய தீர்ப்பின் விவரம் தற்போது வெளிவந்துள்ளது.

இறைச்சிக்காக பசுக்களை கொல்ல தடை விதித்துள்ளதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஆந்திரா - தெலுங்கானா உயர்நீதிமன்றம் இதே தீர்ப்பினை அளித்துள்ளது தெரியவந்துள்ளது. ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சிவசங்கரராவ், கடந்த மார்ச் 1-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், ”பசு புனிதமானது, நாட்டின் தேசிய சொத்து. பசுவை கோமாதா என்று மக்கள் அழைக்கின்றனர். பெரும்பாலான மக்கள் அதனை தெய்வமாக போற்றி வணங்குகின்றனர். பசுக்களை கொலை செய்யக்கூடாது என்று புனித நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். எனவேதான் அதை வதைப்பதோ, இறைச்சிக்காக கொல்வதோ கூடாது” என தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் 63 பசுக்கள், 2 எருதுகளை போலீசார் கைப்பற்றி கோசாலைக்கு கொண்டு சென்றனர். அவற்றை திரும்ப பெற்றுத்தரக்கோரி அவற்றின் உரிமையாளர் ஆந்திரா நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அதைத் தள்ளுபடி செய்து இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Advertisement

சமீபத்தில், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும், மயில் உடலுறவு கொள்ளாமல், ஆண் மயிலின் கண்ணீர் மூலம் கருவடைகிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Tags : hyderabadcowjudgehighcourt

Advertisement

Advertisement
[X] Close