Published : 17,Mar 2020 04:00 AM

சோப்புகள், முகக்கவசம், சானிடைசர்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

TN-Governments-Warn-of-Price-Gouging-Amid-Coronavirus-Outbreak

கொரோனா அச்சுறுத்தலை சாதகமாக்கி முகக்கவசம், சானிடைசர், சோப்புகள் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

அச்சுறுத்தும் கொரோனாவில் இருந்து தப்பிக்க முகக்கவசம், சானிடைசர், சோப்புகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டுமென்று அரசு அறிவுறுத்துகிறது. கொரோனா தொற்று கைகள் மூலம் மூச்சுக்குழல் வழியாக உடலுக்குள் நுழைந்துவிடும் என்பதால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்பது பிரதான அறிவுரையாக உள்ளது.

அதேபோல் வெளியில் பயணம் செய்வோர் கைகளில் தேய்த்து பயன்படுத்தும் கிருமிநாசினியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

image

இதனால் பலரும் Hand sanitizer என்ற கிருமி நாசினியை தேடி அலைகின்றனர். அதேபோல் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கொரோனா அச்சுறுத்தலை சாதகமாக்கி முகக்கவசம், சானிடைசர், சோப்புகள் ஆகியவை அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் முகக்கவசம், சானிடைசர், சோப்புகள் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

image

முகக்கவசம், சோப்புகள், திரவ சோப்புகள், சானிடைசர்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், சட்டமுறை எடையளவு விதிகள் 2011-இன் படி ‌பொருட்களின் பாக்கெட்டுகளில் விலை, அளவு உள்ளிட்ட விவரங்களை தெளிவாக அச்சிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிக விலைக்கு விற்றால் பொதுமக்கள் நுகர்நலனுக்காக செயல்பட்டு வரும் செல்போன் செயலியிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 044- 24321438 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 அனைத்து வித படப்பிடிப்புகளையும் நிறுத்தி வைக்க முடிவு - ஆர்.கே.செல்வமணி

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்