[X] Close

"இந்தியர்கள் பாகிஸ்தானுடன் போர் வேண்டாமென்றே நினைக்கிறார்கள்" ஷோயப் அக்தர் !

விளையாட்டு

Indians-dont-prefer-war-against-Pakistan-says-Shoaib-Akthar

இந்தியர்கள் பாகிஸ்தானுடனான போர் வேண்டாமென்றே நினைக்கிறார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர்
தெரிவித்துள்ளார்.

image

பாகிஸ்தான் ரசிகர்களால் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அன்போடு அழைக்கப்படுபவர் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்
போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றுவிட்டாலும், இப்போது தனக்கென ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து தன்னுடைய கருத்துகளை வீடியோவாக
வெளியிட்டு வருகிறார். அண்மையில் கூட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனர்களின் உணவுப்பழக்கம் குறித்து கடுமையாக விமர்சித்தார்.


Advertisement

“வவ்வால், பூனையெல்லாமா சாப்பிடுறது.. ஒரு வரைமுறை இல்லையா” சீனா மீது அக்தர் கொந்தளிப்பு 

image

இப்போது பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணலில் இந்தியா குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார் ஷோயப் அக்தர்.
அதில் "இந்தியா ஓர் அருமையான நாடு, அங்கிருக்கும் மக்கள் அனைவரும் ஆச்சரியப்படுத்துபவர்கள். அந்நாட்டு மக்கள் பாகிஸ்தானுடன்
விரோதப்போக்கை ஒருபோதும் விரும்பாதவர்கள், மேலும் போரை வெறுப்பவர்கள்.

image

ஆனால், தொலைக்காட்சியை பார்க்கும்போது நாளையே போர் வந்துவிடும் போல எனக்கு தோன்றுகிறது. நான் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு
பயணித்திருக்கிறேன், அந்நாட்டை உன்னிப்பாக கவனித்தும் வருகிறேன். இந்தியா பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறது.
இந்தியாவின் வளர்ச்சி பாகிஸ்தானை முன்னெடுத்தே நடக்கும், இதை நான் நம்புகிறேன்" என்றார்.

image

“ தலையில் உள்ள முடிகளை விட என்னிடம் பணம் அதிகம்”- ஷேவாக்கை மறைமுகமாக சாடிய அக்தர் 

ஐபிஎல் குறித்து பேசிய ஷோயப் அக்தர், "ஐபிஎல் நிச்சயம் நடக்க வேண்டும். இந்தியாவுக்கு கொரோனாவால் எந்தவொரு நஷ்டமும் ஏற்படக்கூடாது.
ஆனால், இப்போது நடப்பவையெல்லாம் எனக்கு கவலையே தருகிறது" என்றார். அண்மையில் கொரோனா குறித்து பேசிய அவர் " எனக்கு ஒன்று
புரியவில்லை நீங்கள் (சீனர்கள்) ஏன் வவ்வால், அதன் ரத்தம், சிறுநீர் இதையெல்லாம் சாப்பிடுகிறீர்கள் என தெரியவில்லை. இதனால் ஒரு கொடூரமான
வைரஸை உலகெங்கும் பரப்பி இருக்கிறார்கள் சீனர்கள். இவர்களால் இப்போது உலகமே அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது. இப்போதும், ஏன் நீங்கள்
வவ்வால், நாய், பூனைகளை சாப்பிடுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. நான் கடுமையான கோபத்தில் இருக்கிறேன்" என தெரிவித்து பெரும்
சர்ச்சையானது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close