தன்னை சந்திப்பதை தவிர்த்த கள்ளக்காதலன் மீது ஆசிட் வீசிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள கோரேகான் பகுதியைச் சேர்ந்தவர் மீரா ஷர்மா. வயது 24. இவர் கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். மீராவுக்கும் அதே பகுதியில் கடை ஒன்றில் வேலை பார்க்கும் ஓம் சிங் சோலங்கி (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. ஒருகட்டத்தில் மீராவை விட்டு விலக நினைத்தார் சோலங்கி. ஆனால் மீரா, அடிக்கடி அவருக்கு போன் செய்தார். சோலங்கி தவிர்ப்பதை புரிந்துகொண்ட மீரா, அவர் வேலை பார்க்கும் எம்.ஜி.ரோடில் உள்ள கடைக்குச் சென்றார். தனியாக பேச வேண்டும் என்று அழைத்தார், சோலங்கியும் சென்றார். அங்கு இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து சோலங்கியின் முகத்தில் வீசினார்.
சோலங்கி குனிந்ததால், முகத்தில் விழ வேண்டிய ஆசிட், தோள்பட்டையிலும் முதுகிலும் பட்டது. வலியால் அவர் துடித்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சோலங்கி கொடுத்த புகாரை அடுத்து மீரா சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்