Published : 16,Mar 2020 02:29 AM

“கொரோனாவை நினைத்து பயப்படத் தேவையில்லை; குணமாக்க கூடியதுதான்”- ஹாங்காங் மருத்துவர்

---Don-t-be-afraid-of-Corona--Is-healing-------Hong-Kong-doctor

 

 

கொரோனா பாதிப்பு குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஹாங்காங்கில் பிரின்செஸ் மார்கரெட் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் மணிமாலா தெரிவித்துள்ளார்.

அவர் பேசும்போது “ கொரோனா பாதித்தவர்கள் உண்மையில் அச்சத்தில் இருக்கும் மக்கள்தான். கொரோனா ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளது. ஆனால், உடல்நலக்குறைவுள்ள மக்கள் அதிகளவில் இருக்கிறார்கள். இது மூச்சுக் குழாய் பிரச்னை‌கள் பலவற்றைப் போன்றதுதான். அவச‌ர சிகிச்சை பிரிவில் நான் சிகிச்சையளிக்கும் நோயாளிகள் வெண்டிலேட்டரில் இருப்பதால் அவர்களால் என்னுடன் தொடர்பு கொள்ள முடியாது.

'தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோய்' - கொரோனா குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

image

அவர்களுக்கு உதவ ஒரு நடைமுறை உள்ளது. அவர்களுக்கு நிறைய அச்சம் உள்ளது. இது முன்பின் தெரியாத ஒரு விவகாரம் என்பதால் நிறைய பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாலே உயிரிழப்பு ஏற்படும் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. நாங்கள் அவசர சிகிச்சை பிரிவில் பலரை குணமாக்கியுள்ளோம்” என்றார்.

"கொரோனா முன்னெச்சரிக்கையை தவிர்க்கும் சென்னை மக்கள்" - அஷ்வின்‌ வேதனை

image

மேலும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்ந்து எத்தனை நபர்கள் குணமாகியுள்ளீர்கள் என்று கேட்டதற்கு, “ஒன்றிரண்டு பேரை குணப்படுத்தியுள்ளோம். சரியான எண்ணிக்கை தெரியவில்லை. எங்களிடம் வந்த கணிசமான நோயாளிகளை குணப்படுத்தியுள்ளோம். அவர்கள் எங்களிடம் பேசி நன்றி தெரிவித்துள்ளனர். எனவே பயத்தை தள்ளி வைத்துவிட்டு பார்த்தால் எல்லா சுவாச நோய்களைப் போன்றதுதான் கொரோனா பாதிப்பும்” என்று பேசினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்