[X] Close

'தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோய்' - கொரோனா குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

TN-government-explain-about-corona

கொரோனா வைரஸை 'தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக' தமிழக அரசு அறிவித்துள்ளது.


Advertisement

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோய் கொரோனா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அறிகுறிகளுடன் வருவோரின் விவரத்தை மருத்துவமனைகள் அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக சுகாதாரத்துறை விதித்துள்ளது. அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா சிறப்பு வார்டை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி கொரோனா அறிகுறி உள்ளவரின் ரத்த மாதிரிகளை சேகரித்து, உரிய ஆய்வகத்துக்கு மருத்துவமனைகள் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவரின் ரத்த மாதிரிகளை தனியார் ஆய்வகங்கள் பரிசோதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்த‌விட்டுள்ளது. அதேபோல, கொரோனா பரவியுள்ள இடத்துக்குள் மக்கள் நுழையவும் அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

image

தேவைப்பட்டால் குறிப்பிட்ட இடத்திலுள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களை மூடவும், ஓரிடத்தில் அதிகம் பேர் கூடுவதற்கு தடை விதிக்கவும், வாகனப் போக்குவரத்தை தடை செய்யவும் ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக எந்தவொரு கட்டடத்தையும் எடுத்துக் கொள்ள ‌மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


Advertisement

image

கொரோனா வைரஸ் ‌பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து கடந்த 28 நாள்களுக்குள் தமிழகம் திரும்பியவர்கள் 104, 044-29510500, 044-29510400, 9444340496, 8754448477 என்ற எண்களில் தங்களைப் பற்றிய விவரங்களை தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"கொரோனா முன்னெச்சரிக்கையை தவிர்க்கும் சென்னை மக்கள்" - அஷ்வின்‌ வேதனை


Advertisement

Advertisement
[X] Close