[X] Close

கேரளாவில் சுற்றுலாத் துறையை முடக்கிய கொரோனா

கொரோனா வைரஸ்

Kerala-tourism-affected-casue-of-corona

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கேரளாவில் சுற்றுலாத் துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


Advertisement

image

இதனால், பொதுமக்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. சபரிமலை போன்ற பிரசித்திப் பெற்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் பக்தர்கள் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பிற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.


Advertisement

‘அப்போது கொடிய நோய் தாக்குதல்கள் இல்லை’.. 100வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி 

image

இந்நிலையில், கொரோனா காரணமாக கேரளா முழுவதும் சுற்றுலாத் துறை கடுமையாக பாதிப்படைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்டுகள் கூட்டமைப்பின் தலைவர் அஜீஸ், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வராத காரணத்தினால் ஹோட்டல்களை இரவு 9 மணிக்கே மூடும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கூறினார். வழக்கமாக இரவு 11.30 மணி வரை ஹோட்டல்கள் திறக்கப்பட்டிருக்கும் என்றும், தற்போது முன்கூட்டியே மூடப்படுவதால் தங்களுக்கான வருவாய் குறைந்து வருவதாகவும் அஜீஸ் கூறினார்.


Advertisement

image

கொரோனா அச்சத்தால் விடுமுறை - உற்சாகத்தில் ‘ஜெய் கொரோனா’ என கோஷமிட்ட ஐஐடி மாணவர்கள் 

கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் முயற்சியாக , கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் 19 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் ஆயிரக்கணக்கானோர், வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Advertisement

Advertisement
[X] Close