லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரடெக்ஷன் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. அத்துடன், புரமோஷன் வேலைகளிலும் ஒருபுறம் படக்குழு களமிறங்கியுள்ளது.
படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் 3 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இந்நிலையில், படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை 6.30 மணியளவில் சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டரில் முதன் முதலாக நாயகி மாளவிகா மோகனன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. விஜய் மற்றும் மாளவிகா ஜோடியாக இந்த போஸ்டரில் உள்ளனர். விஜய் ஹெட் போனில் பாடல்களை கேட்டபடி இருக்கும் நிலையில், மாளவிகா கைகளில் புத்தகங்களை தாங்கிக் கொண்டு இருக்கிறார்.
இதற்கிடையே இன்று வெளியாகவுள்ள பாடல் டிராக்கும் வெளியாகி இருந்தது. ஒட்டுமொத்தமாக மாஸ்டர் டிராக்கில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பீட் ஆஃப் மாஸ்டர் என்ற இன்ஸ்ட்ருமெண்டலும் இடம்பெற்றுள்ளது. 'அந்த கண்ண பாக்காத' என்ற பாடலை யுவனும், 'பொலக்கட்டும் பர பர' என்ற பாடலை சந்தோஷ் நாராயணனும் பாடியுள்ளனர்.
Massy, Classy and sassy! That's what the album’s all about ?
Audio Releasing today.
Readyaa nanbaa? #Master #MasterAudioLaunch @actorvijay @VijaySethuOffl @MalavikaM_ @Dir_Lokesh @anirudhofficial @thisisysr @santhi @SonyMusicSouth @Jagadishbliss @Lalit_SevenScr pic.twitter.com/gssHpawTX1 — XB Film Creators (@XBFilmCreators) March 15, 2020
ஒட்டுமொத்தத்தில் மிகப்பெரிய பட்டாளத்தை இன்றைய இசை வெளியீட்டு விழாவை பார்க்க வைக்கும் முயற்சியில் மாஸ்டர் படக்குழு முழுவீச்சில் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. அதற்காகத்தான் மாலை நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவுக்கு அப்டேட்டுகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. விஜய் ரசிகர்களும் இந்த அப்டேட்களாக உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். அத்துடன், விஜய் பேச்சை கேட்கவும் அவர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
‘யுவன்+சந்தோஷ்+அனிருத்’: மாஸ்டர் ஆல்பத்தில் 3 இசை மாஸ்டர்கள்
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?