
பிபிசி தொலைகாட்சியின் செய்தியாளரை பேட்டி ஒன்றில் "அறைந்து விடுவேன், ஜாக்கிரதையாக
நடந்துக்கொள்ளுங்கள்" என்று மிரட்டிய கால்பந்து அணி மேலாளருக்கு ரூ.25லட்சம் அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல மான்செஸ்டர் கால்பந்து அணியின் முன்னாள் மேலாளராக இருந்தவர் டேவிட் மோயீஸ். கடந்த மே மாதம் கால்பந்து போட்டியின்போது அவரிடம் பேட்டியெடுக்க பிபிசி தொலைகாட்சி நிறுவனத்தின் பெண் செய்தி செய்தியாளர் விக்கி ஸ்பார்க் முயன்றார். அப்போது செய்தியாளர் கேட்ட கேள்வியால் நிதானத்தை இழந்த மேலாளர், "பெண் என்றும் பாராமல் அறைந்து விடுவேன்..ஜாக்கிரதையாக நடந்துக்கொள்ளுங்கள்" என மிரட்டியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் டேவிட் மோயீஸ் மீது தற்போது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. செய்தியாளரை மிரட்டிய டேவிட் மோயீஸுக்கு 30 ஆயிரம் யூரோ அதாவது இந்திய மதிப்பில் சுமார்
25லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது. இவ்விவகாரம் குறித்து செய்தியாளர் எந்த புகாரும் அளிக்காத நிலையில், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மேலாளர் டேவிட் தானாக மன்னிப்புக்கேட்டவுடன் தான் வெளியுலகிற்கு இந்த சம்பவம் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.