[X] Close

ஆஸி., வீரர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா பாதிப்பு?

விளையாட்டு

Australia-pacer-Kane-Richardson-affected-by-Corona

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அவர் இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.


Advertisement

image

கொரோனா வைரஸ் பாதிப்பால் ரசிகர்கள் இல்லாமல் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. உலக புகழ்ப்பெற்ற சிட்னி மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் இந்தப் போட்டி நடைபெறுவதால் கேலரிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.


Advertisement

டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை: துணை முதல்வர் தகவல் 

image

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அண்மையில் தென் ஆப்பிரிக்காவுடனான தொடரை இழந்த ஆஸ்திரேலியா, இப்போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் அதிரடியாக விளையாடி வருகிறது. ஆனால் இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் விளையாடவில்லை.


Advertisement

image

“ஆளே இல்லாத கடைக்கு யாருக்குபா டீ ஆத்துறீங்க ?”- கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ் 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் "கேன் ரிச்சர்ட்சனுக்கு சளியும், தொண்டை தொற்றும் இருக்கிறது. ஆஸ்திரேலியா அரசின் அறிவுறுத்தலின்படி, கேன் ரிச்சர்ட்சன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையென்றால் அவர் அணியினருடன் சேர்க்கப்படுவார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close