உணவு தேடி வரும் பறவைகளுக்கு பள்ளி வளாகத்தில் செயற்கை கூண்டு தயார் செய்து உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து வரும் அரசு பள்ளி மாணவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த பாலவாடி கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி வளாகம் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனால் அங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரக் கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்திலேயே வனப் பகுதியைபோல பசுமையான மரங்கள் இருப்பதால், பல்வேறு பகுதிகளிலிருந்து வெவ்வேறு வகையான பறவைகள் தினமும் மாலை நேரங்களில் வந்து அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டு செல்கின்றன. ஆனால் கோடை காலங்களில் இந்தப் பகுதியில் ஏற்படும் கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செழிக்காத நிலை உள்ளது. இதனால் பள்ளி வளாகத்திற்கு வரும் பறவைகளுக்கு போதிய அளவு உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில்லை.
“என் தாயை தப்பாக பேசினார் விஷால்; அவருக்கு ஆப்பு காத்திருக்கிறது”- மிஸ்கின் காட்டம்
இதனால் பறவைகள் வருகையை தக்க வைப்பதற்காக, பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் மாணவர்கள் அட்டைப் பெட்டிகளை வைத்து செயற்கையாக பறவைகளுக்கான கூண்டு தயார் செய்து மரக்கிளைகளில் தொங்கவிட்டுள்ளனர். மேலும், பறவைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை தினமும் மரங்களில் வைத்து வருகின்றனர்.
“2021 தேர்தலில் மாற்றம் நிகழப்போவது உறுதி” - பிரேமலதா விஜயகாந்த்
இவ்வாறு ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை பள்ளி மாணவர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் செயற்கை கூண்டுகள் வைத்து அதற்குரிய தானியங்கள் மற்றும் தண்ணீரை தினமும் வைத்து பராமரித்து வருகின்றனர். இதனால் வறட்சி காலங்களில் கூட, பள்ளி வளாகத்திற்கு வரும் பறவை இனங்கள் வழக்கமாக வந்து செல்கின்றன.
Loading More post
காஷ்மீர்: தொலைக்காட்சி நடிகையை கொன்ற 2 தீவிரவாதிகள் 24 மணிநேரத்தில் சுட்டுக்கொலை
“நாடாளுமன்ற நடவடிக்கையில் சிபிஐ தலையிடுகிறது” - சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகள்.. நகர மறுத்து அடம்பிடித்த ரூபாலி யானை.. நெகிழ்ச்சி சம்பவம்
டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ் தேர்வு - மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு
’மோடிக்கு 17 கேள்விகளுடன் பேனர்கள்’.. 2வது முறையாக பிரதமரின் நிகழ்ச்சியை தவிர்த்த கேசிஆர்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!