Published : 13,Mar 2020 05:00 AM
ரசிகர்கள் இல்லாமல் இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலா மைதானத்தில் நேற்று நடைபெறவிருந்த இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
“உங்களுக்கு நம்பிக்கை அளிக்கவே இதனை சொல்கிறேன்”: கொரோனாவிலிருந்து மீண்ட அமெரிக்க பெண்
இந்நிலையில், வரும் 15-ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் 2-ஆவது ஒரு நாள் போட்டியும், அதைத்தொடர்ந்து 18-ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது ஒரு நாள் போட்டியும் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் பெருமளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதால், பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.
கொரோனா எதிரொலி : இந்திய சுற்றுலாத்துறை 8,500 கோடியை இழக்க வாய்ப்பு
இதேபோல கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தி இருப்பதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்க உத்தரவிடவேண்டும் என தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.