Published : 17,Jan 2017 05:03 AM
எம்ஜிஆர் நினைவிடத்தில் தீபா மரியாதை

சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின்., 100-ஆவது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கும் தீபா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனிடையே, தனது அரசியல் பணி குறித்து தீபா இன்று முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.