Published : 12,Mar 2020 02:32 AM

கொரோனாவுக்கு முன் உலகை உலுக்கிய பெருந்தொற்று நோய்கள்..!

WHO-declares-novel-coronavirus-outbreak-a-pandemic

தற்போது பரவலாக ஒலிக்கும் சொல் பெருந்தொற்று நோய். அப்படியென்றால் என்ன? அவை, கடந்த ஒரு நூற்றாண்டில் உலக அளவில் எங்கெல்லாம் பரவி, எத்தனை உயிர்களைப் பலிகொண்டன?

உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் நிறைய பேருக்கு ஏற்பட்டு, பல இடங்களுக்கும், ஏன் பல நாடுகளுக்கும் எளிதில் பரவி எண்ணற்றோரை காவு கொள்ளும் நோய் பெருந்தொற்று நோய் என்றழைக்கப்படுகின்றது. இது அறியப்படாத புதிய நோயாகவும் இருக்கலாம் அல்லது நீண்டகாலமாக வந்திராத நோயாகக்கூட இருக்கலாம். இந்த வகையான நோய் சில நாட்கள் முதல் ஆண்டுக்கணக்கில் வரை நீடித்திருக்கும். மனித வரலாற்றில் கடந்த காலங்களில், வயிற்றுப்போக்கு, கொள்ளை நோய் என்றழைக்கப்பட்ட பிளேக், பெரியம்மை, குளிர் காய்ச்சல் போன்றவை இவ்வாறு பரவிய நோய்களாக வரலாற்றில் பதிவாகி உள்ளன.

image

தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு முன்னர் பிரபஞ்சம் முழுவதும் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த நோய் எய்ட்ஸ். ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் கடந்த 1976-ஆம் ஆண்டு பரவிய எய்ட்ஸ், 90கள் மற்றும் 2000ஆவது ஆண்டுகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. எய்ட்ஸ்க்கு இதுவரை சுமார் மூன்று கோடியே 60 லட்சம் பேர் வரை உயிரிழந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

image

எய்ட்ஸை போன்று மனித சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய மற்றொரு பெருந்தொற்றுநோய் சார்ஸ். நுரையீரல் அழற்சி நோயான இது 2002ஆம் ஆண்டு ஹாங்காங்கில் இருந்து பரவி 2003-ஆம் ஆண்டு ஜூலை வரை இந்தியா உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. எய்ட்ஸ்க்கு முன்னர் உலகை மிரட்டிய மற்றொரு கொடிய நோய் ஃப்ளூ எனப்படும் சளிக்காய்ச்சல். 1968-இல் முதன்முதலாக ஹாங்காங்கில் உருவான ஃப்ளூ 2 என்றழைக்கப்பட்டது. இதற்கு முன்னரும் ஒருமுறை ஃப்ளூ பரவியிருந்ததால், இம்முறை ஃப்ளூ 2 என்றழைக்கப்பட்டது. இந்நோய்க்கு சுமார் பத்து லட்சம் பேர் உயிர் மாண்டனர்.

image

இதற்கு முன்னர் பரவிய கொடிய நோய் ஆசியன் ஃப்ளூ. சீனாவில் 1956-ஆம் ஆண்டு பரவிய இந்நோய் சிங்கப்பூர், ஹாங்காங், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் பெருமளவில் உயிர்களைக் காவுகொண்டது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.

கடந்த 1918ஆம் ஆண்டு பரவி 1920 வரை உலகை அச்சுறுத்திய ஃப்ளூ என்ற சளிக்காய்ச்சலுக்கு அப்போது 2 கோடி முதல் சுமார் 5 கோடி பேர் வரை உயிர் மாண்டனர். 1918ல் ஃப்ளூ காய்ச்சலால் சுமார் 50 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இந்நோயால் ஏற்பட்ட இறப்பு விகிதம் உலக அளவில் பத்து முதல் இருபது சதவிகிதம் வரை இருந்தன. ஃப்ளூ காய்ச்சல் பரவிய முதல் 25 வாரங்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி பேர் உயிரிழந்தனர். இதில் சிறார்களும் முதியோரும் பெருமளவில் அடங்குவர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்