Published : 11,Mar 2020 07:12 AM
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் முதியவர்களே அதிகம்..!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் குழந்தைகளை விட முதியவர்களையே அதிகம் பாதித்திருப்பது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சீனாவில் கொரோனோ வைரஸ் பரவி பலரும் உயிரிழந்த நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
யாருக்கு அதிகாரம்? கிரண்பேடிக்கு எதிரான உத்தரவு ரத்து
இந்நிலையில், கொரோனா வைரஸ் குழந்தைகளை விட முதியவர்களையே அதிகம் பாதித்திருப்பது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் 2.4 சதவீத குழந்தைகளே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களில் 0.2 சதவீத குழந்தைகளே மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் 21.9 சதவீதம் பேர் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள். கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் 10 முதல் 39 வயதிற்குட்பட்டவர்கள் 0.2 சதவீதம் மட்டுமே. இதன்மூலம் முதியவர்களையே கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்திருப்பதும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருப்பதும் உறுதியாகியுள்ளது
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்.. விரைவில் முதல்வர் அறிவிப்பார் என காமராஜ் விளக்கம்