Published : 09,Jun 2017 03:46 PM
மக்களுக்காகவே மத்திய அரசுடன் ஒத்துழைப்பு: ஜெயக்குமார்

தமிழக மக்களின் நலன் கருதி மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு ஒத்துழைக்கும் என நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் நடைபெற்ற சரக்குப்பெட்டக திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசு வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அதிமுக தலைமை உரிய நேரத்தில் உரிய முடிவை எடுக்கும் எனக் கூறினார். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தமிழகத்தில் கப்பல் மற்றும் விமான சேவை கூடுதலாக வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கான வரைவுத் திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசியம் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.