Published : 10,Mar 2020 08:48 AM
ட்ரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா? - விளக்கம் அளித்த வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு இதுவரை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படவில்லை என்றும், அவர் உடல் ஆரோக்கியத்துடனே இருக்கிறார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால், சீனாவில் மட்டும் 80 ஆயிரத்து 754 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3136 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், கொரோனா தொற்று பரவுவது சீனாவில் கட்டுக்குள் வந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் அவருடன் கைகுலுக்கிய எம்பிக்கள் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் தாங்களாகவே முன் வந்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். ட்ரம்பும் இந்த நிகழ்வில் பங்கேற்றதால் அவருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடைபெற்றதா என கேள்வி எழுந்தது.
இதற்கு பதில் அளித்துள்ள வெள்ளை மாளிகை வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்றும் ட்ரம்பிடம் அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் கூறியுள்ளது.
கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை